நாட்டில் மீண்டும் வரிசை யுகம் உருவாகும் : வஜிர அபேவர்தன எச்சரிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka Vajira Abeywardena Election
By Sathangani Mar 28, 2024 03:03 AM GMT
Report

தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதிபர்  ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “ஓரிரு சம்பவங்களால் இந்த நாடு வங்குரோத்தாகவில்லை. இந்த நிலை நீண்ட கால காரணங்களால் உருவாகியது.

ஹமாஸ் விடுத்த கோரிக்கை : உடனடியாக நிராகரித்த அமெரிக்கா

ஹமாஸ் விடுத்த கோரிக்கை : உடனடியாக நிராகரித்த அமெரிக்கா

முப்பது வருட யுத்தம்

நாட்டில் நீண்ட காலமாக யுத்தம் இடம்பெற்றது. யுத்தத்திற்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் நாட்டின் நிதியில் மூலமே கொள்வனவு செய்யப்பட்டன. அதன்படி முப்பது வருடங்கள் யுத்தம் செய்தோம். முப்பது வருடகால யுத்தத்தினால் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது.

நாட்டில் மீண்டும் வரிசை யுகம் உருவாகும் : வஜிர அபேவர்தன எச்சரிக்கை | Economic Crisis May Occur Again In Sri Lanka

மேலும், 1971 இல், டிரில்லியன் டொலர் பணம் அழிக்கப்பட்டது. 1987 மற்றும் 1988 இல் ஏற்பட்ட பயங்கரமான சூழ்நிலையால் ஏராளமான உயிர்கள் அழிக்கப்பட்டன. மேலும் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டது.

பௌத்த தேரர்கள், காவல்துறையினர் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தரவும் கொல்லப்பட்டார்.

ஏராளமான ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் மிகவும் திறமையான தோட்ட முகாமையாளர்களை நாடு இழந்தது. இந்த நிலையில்தான் நாம் சண்டை பிடித்துக்கொண்டது போதும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கருத்து வேறுபாடுகளை களைந்து தேசியக் கொள்கைகளுக்காக ஒன்றுபட வேண்டும் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரையொன்றை முன்வைத்தார். இப்போதும் அது நாடாளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாணம் வலிவடக்கில் காணி விடுவிப்பு : அமைச்சர் டக்ளஸின் நம்பிக்கை

யாழ்ப்பாணம் வலிவடக்கில் காணி விடுவிப்பு : அமைச்சர் டக்ளஸின் நம்பிக்கை

வரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை 

அதிபரால்  முன்வைக்கப்பட்ட சட்ட மூலங்களில் தேசிய கொள்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆசியாவிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிதிக் கட்டுப்பாட்டு சட்ட மூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளன. பணப் பயன்பாட்டையும் சட்டக் கட்டமைப்பில் சேர்த்துள்ளோம்.

எனவே, திருடன், திருடன் என்று யாருக்கும் சொல்ல முடியாது. அனைவருக்கும் சமமான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வது தொடர்பில் மேலும் சில விசேட சட்ட மூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாட்டில் மீண்டும் வரிசை யுகம் உருவாகும் : வஜிர அபேவர்தன எச்சரிக்கை | Economic Crisis May Occur Again In Sri Lanka

இலங்கை வங்குரோத்தானதை அடுத்து, அதிபர் ரணில் , இனி பணத்தை அச்சிட முடியாது என்று அறிவித்தார். ஆனால் விருப்பமின்றியேனும் நாட்டின் வரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எத்தனை சிரமங்கள் இருந்தாலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மறக்கவில்லை. அஸ்வெசும பலன்கள் ரூ.15000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இந்நாட்டில் இருபது இலட்சம் பேருக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கும் உறுமய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழர் தலைநகரில் சிவலிங்க சிலைகள் : போராட்டத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

தமிழர் தலைநகரில் சிவலிங்க சிலைகள் : போராட்டத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

அதிபராக தெரிவு செய்ய வேண்டும்

அதிபர் ரணில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வாறான பணிகளைச் செய்தார். ஆறு வருடங்கள் மற்றும் பன்னிரண்டு வருடங்கள் இந்த நாட்டின் அதிபர்களிடம் நாடு ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் அனைவரையும் விட தற்போதைய அதிபர் இந்த குறுகிய காலத்தில் செயற்பட்ட விதத்தை வேறு எந்த அதிபராலும் ஈடு செய்ய முடியாது.

அந்த அதிபர்கள் வங்குரோத்தான நாட்டில் செயற்படவில்லை. இதன் காரணமாக அடுத்த அதிபர் தேர்தலின் போது அனைவரும் அவரைப் பலப்படுத்தி அதிபராக தெரிவு செய்ய வேண்டும். மேலும், எதிர்காலத்தில் அவரை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

நாட்டில் மீண்டும் வரிசை யுகம் உருவாகும் : வஜிர அபேவர்தன எச்சரிக்கை | Economic Crisis May Occur Again In Sri Lanka

இந்தப் பயணம் மாறினால், மீண்டும் பெட்ரோல், எரிவாயு சிலிண்டர்களுடன் வீதியில் வரிசையில் நிற்கும் யுகம் மீண்டும் உருவாகும். எனவே, மக்கள் கவனமாக செயற்பட வேண்டும்.

நாட்டில் தற்போதைய அரசியல் செயற்பாடுகளை சீர்குலைத்து வெறுப்பு அரசியலில் ஈடுபடும் குழுக்கள் உள்ளன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சகல சக்திகளிலிருந்தும் இலங்கையை விடுவித்து, ஆசியாவின் வளர்ந்த நாடாக உயர்த்த வேண்டுமானால், இந்நாட்டின் பொதுமக்கள் இவ்விடயத்தில் கவனமாகச் செயற்பட வேண்டும்.

குவைத்தில் உள்ள குடியேற்றவாசிகள்! நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

குவைத்தில் உள்ள குடியேற்றவாசிகள்! நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை

அரசியலமைப்பின்படி ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னதாக அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதன்பின்னர் அரசியலமைப்பின்படி பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை ஒத்திவைப்பதற்காக தேர்தல் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை. கோஷங்கள் இல்லாததால் தான் தேர்தலை நடத்துவதில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

நாட்டில் மீண்டும் வரிசை யுகம் உருவாகும் : வஜிர அபேவர்தன எச்சரிக்கை | Economic Crisis May Occur Again In Sri Lanka

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாட்டின் வங்குரோத்து நிலை நீக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இப்போது கோஷங்கள் இல்லாமல் போய்விட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தாண்டை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இம்முறை புத்தாண்டை கொண்டாடும் சூழலை அதிபர் ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார்.

அதிபர் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பியுள்ளார். அவர் அனைத்து மக்களின் நன்றிக்கு தகுதியானவர்.” என  வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

உணவு எடுக்கச் சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த காசா மக்கள்

உணவு எடுக்கச் சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த காசா மக்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019