உணவு எடுக்கச் சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த காசா மக்கள்
காசாவில் நாளாந்தம் உயிரிழப்புகளும் காயங்களும் அதிகரித்து வரும் அதேவேளை பட்டினியால் மக்கள் வாடும் அவல நிலையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா வான்வழியாக வீசிய உணவுப்பொருட்களை எடுக்கச் சென்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கடற்கரையோரத்தை நோக்கி பொதுமக்கள் ஒடுவதையும்
வடக்கு காசாவில் உள்ள பென்லகியா கடற்கரையோரத்தை நோக்கி பொதுமக்கள் ஒடுவதையும் அதன் பின்னர் ஆழமான நீரில் பொதுமக்கள் காணப்படுவதையும் பின்னர் அவர்களின் உடல்கள் மீட்கப்படுவதையும் காண்பிக்கும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
அவர் தனது பிள்ளைகளிற்கு உணவை பெற்றுக்கொள்வதற்காக கடலுக்குள் நீந்தி சென்றார் அவர் தியாகியாக மாறிவிட்டார் என கடற்கரையில் காணப்படும் ஒருவர் தெரிவிப்பதை காணொளி காண்பித்துள்ளது.
இதேவேளை அவர்கள் தரைவழி ஊடாக மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் ஏன் இப்படி செய்கின்றார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரசூட் இயங்காததால்
18 பொதிகளில் மனிதாபிமான உதவிகளை பரசூட் மூலம் வீசியதாக தெரிவித்துள்ள பென்டகன், பரசூட் இயங்காததால் அவை கடலிற்குள் விழுந்ததாக தெரிவித்துள்ளது.
காசாவில் சிலர் களைகளை உண்பதற்கும் விலங்குகளின் உணவிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டியை உண்பதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பரிதாபமான நிலையில், உணவுபொருளுக்கு மக்கள் ஏங்கிவரும், நிலையில், உதவிப் பொருட்களை பெற முயலும்போது உயிரிழப்புகள் ஏற்படுவது மிகப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |