ரணிலிற்கு சர்வதேசத்தில் இருந்து வந்த உறுதிமொழி! - தொடரும் தீவிர முயற்சிகள்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஆசிய மற்றும் உலக வங்கி உறுதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்புக்களின் பின் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் தொடர்ந்து கருத்துரைத்த அவர், "நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுபட்டது.
மருந்து, உணவு மற்றும் உர விநியோக நெருக்கடிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் இந்த சந்திப்புக்களின் போது அவதானம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய இந்த துறைகளுக்காக மேலும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக குறித்த பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.
இந்த ஒத்துழைப்புக்களின் அளவு அதிகரிக்கப்படும் என்பதோடு, பொருளாதாரத்துறைக்கும் அவை கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இதற்கு முன்னர் கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
எனினும் எமக்கு தற்போதுள்ள பிரச்சினை அடுத்த வாரத்திற்கான எரிபொருள் கொடுப்பனவிற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சவால் ஆகும்.
வங்கிகளில் டொலர் தட்டுப்பாடு காணப்படுகின்றமையால் நாம் வேறு வழிமுறையூடாக நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இது தொடர்பில் முழுமையாக நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்", எனக் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரம் மெல்ல மீள்வதாக தென்படுகின்றது.
பதவியேற்ற அடுத்த நாளே டொலரின் பெறுமதி திடீரென குறைவடைந்து மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பின் பின்னர் பிரதமர் நாட்டிற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர் கொண்டு வரவுள்ளதாக உறுதியளித்திருந்தார்.
இதேவேளை, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மீளாய்வு செய்வதற்காக பிரதமர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
