வடக்கின் பொருளாதார அபிவிருத்தியை திட்டமிட்டு முடக்கும் அநுர அரசாங்கம்
இலங்கையின் (Sri Lanka) வடக்குப்பகுதியை பொருளாதார ரீதியில் முன்னேறவிடமால் தங்களது கட்டுப்பாக்குள் வைத்திருக்க அரசாங்க தரப்பு எண்ணுவதாக ஓய்வு நிலை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி இரேனியஸ் செல்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), இலங்கை மற்றும் இந்தியாவிற்கான (India) தரைவழி பாதை அதாவது இராமேஸ்வரம் தொடக்கம் தலைமன்னார் பாதை என்பதை தற்போதைய அரசாங்கம் எவ்விதத்திலும் அனுமதிக்காது என தெரிவித்திருந்தார்.
அத்தோடு, இந்தியா மிகப்பெரிய நாடு என்ற அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் இணைந்தால் அவர்களது பொருளாதார ஆதிக்கம் நம்மை விழுங்கி விடும் என்பதால் நாங்கள் அதனை ஒத்துழைப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டிருந்தார்.
இது நியாயமான பயமாக இருக்கும் என ஏற்றுகொண்டாலும் கூட இதையடுத்து அமைச்சர் தெரிவித்த கருத்து மிகவும் சிக்கலான ஒரு விடயமாகவுள்ளது.
காரணம், மன்னாரில் (Mannar) இருந்து திருகோணமலைக்கு (Trincomalee) அமைப்பதாக இருந்த நெடுஞ்சாலையை கூட நாங்கள் இடைநிறுத்தி விட்டோம் ஏனென்றால் அது நாட்டை பிரிக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ஒரு சிறிய தீவின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை நாட்டை பிரிக்கும் என அவர்கள் தெரிவிப்பதில் இருந்து வட பகுதி பொருளாதார ரீதியில் தற்சார்புடையதாக மாறுமாக இருந்தால் அது அரச தரப்புக்கு கட்டுபடுத்த முடியாத ஒன்றாக மாறும் என அவர்கள் சிந்திப்பது வெளிப்படையாக புலப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மன்னார் காற்றாலை திட்டம், தமிழர் பிரதேச அபிவிருத்தி திட்டங்கள், தமிழர் பிரதேச அபிவிருத்தி திட்டத்தில் இந்தியாவின் தலையீடு, வடக்கு அபிவிருத்தி திட்டங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

