கல்வியமைச்சு அதிகாரிகளின் அசண்டையீனம் - மாணவியின் விடா முயற்சிக்கு கிடைத்தது பலன்
தனது அவசர தேவையொன்றுக்கான பதிலை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு மாணவியொருவர் 185 தடவைகள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட போதிலும், அதிகாரிகளிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை முதல் மாலை வரை மேற்கொண்ட முயற்சியின் ஊடாக, மாணவியின்186வது தொலைபேசி அழைப்புக்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
கல்வி அமைச்சின் உரிய பிரிவினரை தொடர்புகொள்வதற்கு 9 மணி முதல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், 185 அழைப்புக்களை எந்தவொரு நபரும் ஏற்கவில்லை என கூறப்படுகின்றது. குறித்த மாணவி, மூன்று தொலைபேசிகளின் ஊடாக, கல்வி அமைச்சை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளதாக அறிய முடிகின்றது.
எனினும், 186வது அழைப்பை ஏற்ற பெண் அதிகாரியொருவர், குறித்த மாணவிக்கு பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.