பெண் என்பதால் கீழ்த்தரமாக தாக்கப்படும் ஹரிணி – உட்கட்சி சதி: சாடும் சாணக்கியன்
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அவரின் தனிப்பட்ட விடயங்களை வைத்து முன்னெடுக்கப்படும் கீழ்த்தரமான சேறுபூசல் நடவடிக்கைகளை இலங்கை தமிழரசு கட்சி வன்மையாக கண்டிப்பதாக சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் மீதான தாக்குதல்களில் அரசாங்கத்திற்கு உள்ளிருந்தும் சிலர் செயற்படுவது போல் சந்தேகம் எழுகிறது என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ”கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பெரும் விமர்சனங்கள் உள்ளன.

எம்மிடையே அது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன. குறிப்பாக வரலாறு தொடர்பான சில உள்ளடக்கங்கள் தொடர்பில் விமர்சனங்கள் உள்ளன.
அந்த வகையில் இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
இந்நிலையில் பிரதமருக்கு எதிராகவும் பெண்ணென்ற வகையில் அவருக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் கீழ்த்தரமான சேறுபூசல் நடவடிக்கைகளை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அவரின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. பெண் அரசியல்வாதியென்பதால் தனிப்பட்ட ரீதியில் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |