கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மலையக மாணவர்களின் கல்வி நிலை!
டிட்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மலையகப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் வழக்கமான கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் பகுதி அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மலையகப் பிரதேசங்களில் நிலச்சரிவு அபாயம் காரணமாக சில பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.
மேலும், வீடுகளை இழந்த குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மாணவர்கள் புத்தகங்கள், பாடப்பொருட்கள் மற்றும் படிப்பிற்கான அமைதியான சூழலை இழந்துள்ளனர்.
இதனால் மாணவர்களின் கல்வி தொடர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் பதுளைக்கு சென்ற ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தில், ஒரு மாணவியின் கல்வியை குறித்த பேரனர்த்தம் எவ்வாறு பாதித்துள்ளது என்பது வலிகளுடன் விவரிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு அந்த மாணவியின் எதிர்பார்ப்புக்கள் மற்றும், கல்வியை தொடர்வதில் தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் தொடரும் காணொளியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |