பிரித்தானியாவில் பிரபல நிறுவனமொன்று பெற்றோருக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் (UK) ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு நவீன தொலைபேசிகளை வழங்க வேண்டாம் என பிரபல EE மொபைல் நெட்வர்க் ஒபரேட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது.
குறித்த எச்சரிக்கையானது, பெற்றோரிடம் இருந்து வழிகாட்டுதலுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளின் "டிஜிட்டல் நல்வாழ்வை" மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோசமான விளைவு
அத்தோடு, 11 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு குறைந்த திறன்களை கொண்ட சாதனங்களை வழங்க வேண்டும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் நடத்தையில் இந்த நவீன சாதனங்கள் மற்றும் இணையப் பயன்பாட்டின் மோசமான விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் இந்த பரிந்துரை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீங்கு
இணைய அணுகல் பிள்ளைகளின் கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறது, அத்துடன் பெற்றோர்கள் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்காணிக்கவும் உதவுகிறது.
ஆனால், இவை பிள்ளைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை கொண்டுள்ளதுடன், வெளியில் விளையாடுவது அல்லது நண்பர்களுடன் பேசுவது போன்ற பிற செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதாக EE நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |