இடித்தழிக்கப்பட்ட திருக்கோணேச்சரம்: உயிர்த்தியாகம் செய்த தமிழ் மக்களை நினைவேந்தும் இறை வழிபாடுகள்!
ஈழத்தமிழர்களின் உயர்ந்த பண்டை வழிபாட்டுத்தலமும் பாடல்பெற்ற புராதன ஈச்சரமுமான திருக்கோணேச்சரம் அந்நியர்களால் இடித்தழிக்கப்பட்ட போது உயிர்த்தியாகம் செய்த தமிழ் பெருமக்களை நினைவேந்தும் வகையில் இறை வழிபாடுகள் திருக்ககோணேச்சரத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த இறைவழிபாடுகள் திருக்கோணேச்சரத்தில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் திருமுன்னிலை வகிக்க ஞாயிறு காலை (நாளை)10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கோணேசர் திருப்பதிகம் ஓதி வழிபாடுகளை நிறைவு செய்த பின் தொடர்ந்து இந்த 400 வது நினைவேந்தல் ஆண்டு நிகழ்வுகளை எதிர்வரும் ஆண்டு முழுவதும் நாடாளாவிய ரீதியில் முன்னெடுத்தல் தொடர்பான வழி வரைபட கலந்துரையாடல், அடையாள ஆவண நூல்நிலைய அங்குரார்ப்பணம் அறநெறி மாணவருக்கு நூல்கள் வழங்கல் மாகேசுவர பூசை என்பன தென்கயிலை ஆதீனத்தில் அகத்தியர் அடிகளார் தலைமையில் இடம்பெறும்.
உயிர்த்தியாகம் செய்த தமிழ் மக்களை
மாலை கணித விஞ்ஞான ஆசிரிய ஆளணி இன்றி இடப்படும் திருகோணமலையின் எல்லை கிராமமான வெருகலில் ஒரு தொகுதி மாணவருக்கான கணித விஞ்ஞான கருத்தரங்கு சைவ மகா சபையின் சிவசகோதரர்களால் வெருகல் அதிபர் சிவ சகோதரர் சுதாகரன் ஒருங்கிணைப்பில் இடம்பெறும்.
இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பண்டைய பெரும் தமிழர் அடையாள சிவாலயத்தை எம் முன்னோரின் தியாகத்தை நினைவேந்தும் வழிபாடுகளில் நிகழ்வுகளில் உணர்வுமிக்க தமிழராய் கலந்து கொள்ளுமாறும் நிகழ்வுகளை முன்னெடுக்க அனைவரது பேராதரவையும் வேண்டி நிற்குமாறு தென் கயிலை ஆதீனமும் ஏற்பாட்டு குழுவும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |