ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேல், வடக்கு, கிழக்கு, சபரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை நாளை முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்
அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று (15) அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அனர்த்தங்களை எதிர்நோக்கிய 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை
அதற்கமைய ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 6 மணி நேரம் முன்