ஈழ விடுதலை ஆயுதமாக எனது எழுத்துக்கள் - ஈழத்து எழுத்தாளரின் நிலை
"எங்கள் மண்ணில் விதைக்கப்பட்ட, எங்களுக்காக போராடிய மாவீரர்களுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும்.
இளமை, வாழ்க்கை, நலன்கள் அத்தனையும் மறந்து எங்களுக்காக, தமிழர் விடுதலைக்காக போராடிய எங்களது போராளிகளின் ஆன்மாவை எழுத்துக்களில் வெளிப்படுத்த வேண்டும்.
ஆயுதத்தின் வழியாகவும்,செயல்களின் வழியாகவும் எமது மாவீரர்கள் வலியுறுத்திய விடயங்களை என்னுடைய எழுத்தில் வலியுறுத்த வேண்டும் என்னும் எண்ணத்தில் எனது இலக்கியங்களுக்கு ஈழம் சார்ந்த தலைப்புக்களை இடுகின்றேன்."
இவ்வாறு ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் ஐ.பி.சி தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
ஈழ விடுதலை
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எமது தேசத்தின் விடுதலை சார்ந்து, எமது இனத்தினுடைய உள்ளக்குமுறல்களின் வெளிப்பாடாகவே எனது இலக்கிய தொகுப்புக்களை வெளியிடுகின்றேன்.
எனது கவிதைகளில் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறேன், குறிப்பாக எனது வாழ்வில் நான் சந்தித்த நிகழ்வுகளில் இருந்து, மனிதர்களிடம் இருந்து கவிதைகளை உருவாக்கிக்கொள்கிறேன்.
ஒரு இனத்தின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகள் பயத்தில் வாழும் சாமானியனையும் பொங்கி எழும் வீரனாக மாற்றும்.
எனது அண்ணாவினுடைய வீர மரணம் என்னையும் ஒரு வீரனாக மாற்றியுள்ளது, எனது வீரத்தை எழுத்துக்களின் மூலமாக காட்டுகிறேன்.
ஆபத்தான, சவாலான சூழலில் இருந்து எனது ஈழ விடுதலை பற்றிய படைப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கிறேன்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்