ஈழத்தமிழ் அகதிகளுக்கு உடன் உதவுங்கள் - இந்திய எம்.பி கோரிக்கை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அவசரம் சிகிச்சை அளிக்குமாறு தமிழக சுகாதார அமைச்சரான மா. சுப்பிரமணியனுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் அகதிகளுக்கு சிகிச்சை அளித்தல் தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் மொத்தம் 105 பேர் உள்ளனர்.
அதில் 78 பேர் ஈழத்தமிழர்கள் மீதமுள்ள 27 பேர் பங்களாதேஷ், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஈழத் தமிழர்களில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் கொரோனா மையத்தில் ஐந்து நாட்கள் வைத்திருந்து மீண்டும் முகாமிலேயே கொண்டுவந்து விட்டுள்ளனர்.
அவர்களில் பலருக்கு இப்போது உடல் நிலை மிக மோசமாக உள்ளது. மாண்புமிகு அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.