முட்டை மற்றும் கோழி இறைச்சி தொடர்பில் வெளியான தகவல்
நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அஜித் குணசேகர (Ajith Gunasekera) தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, நுகர்வோர் நியாயமான விலையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோழி இறைச்சி விற்பனை
மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினாலேயே கோழி இறைச்சி விற்பனை இவ்வாறு குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கோழி இறைச்சிக்கான தேவை குறைந்துள்ளதால் உறைந்த கோழி விலை கிலோ 800 ரூபாவாகக குறைந்துள்ளதுடன் முட்டை ஒன்றின் விலை 30 முதல் 33 ரூபா வரை குறைந்துள்ளதாக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |