முட்டை விலை தொடர்பில் அமைச்சின் தீர்மானம்
முட்டைக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், விலை நிர்ணயத்தை அடுத்த வாரம் நுகர்வோர் அதிகார சபைக்கு அனுப்புவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு குறித்து நேற்றைய தினம்(5) அமைச்சில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ள போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முட்டை விலை
தற்போது சந்தையில் முட்டையின் விலை கட்டுப்பாடின்றி பாரிய அளவு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு சாதாரண விலையில் முட்டையை வழங்குவதற்காக முட்டைக்கான உச்சபட்ச விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 30 ரூபா செலவாவதாகவும், நாட்டில் நாளொன்றுக்கு 5.8 மில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளொன்றில் நாட்டின் முட்டை தேவை 7.5 மில்லியன் ஆக உள்ளது. சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 4 கோடி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் மகிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன யாபா, அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |