புத்தாண்டில் மகிழ்ச்சி தகவல் : குறைவடையப்போகும் முட்டை விலை
ஏப்ரல் மாதத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக கொண்டு வரப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தினசரி உள்ளூர் கோழி முட்டை உற்பத்தி மொத்த தினசரி தேவையை விட அதிகமாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்ளூர் கோழிப்பண்ணைகளில் அதிகரித்த முட்டை உற்பத்தி
சராசரியாக இந்த நாட்டில் ஒரு நாளைக்கு முட்டை தேவை 65 லட்சம் ஆகும். உள்ளூர் கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி ஏற்கனவே 75 லட்சத்தை தாண்டியுள்ளதாக முட்டை உற்பத்தி தொழில் சங்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய் விலங்குகளின் எண்ணிக்கை
மேலும், இந்த நாட்டில் தாய் விலங்குகளின் எண்ணிக்கை 85,000 ஆக இருந்தாலும், அனைத்து கோழிப் பண்ணைகளிலும் உள்ள தாய் விலங்குகளின் எண்ணிக்கை 135,000 ஐத் தாண்டியுள்ளதுடன், அனைத்து கோழிப் பண்ணைகளிலும் குஞ்சுகளின் கொள்ளளவு 100 வீதத்தால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் கோழி முட்டையின் விலை 45-50 ரூபாயாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |