நாட்டில் உச்சம் தொட்ட முட்டை விலை...! வெளியான காரணம்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
Egg
By Shalini Balachandran
முட்டை விலை உயர்விற்கு தற்போதைய அரசாங்கமும் விவசாயத் திணைக்களமுமே நேரடிப் பொறுப்பாகும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு சோள இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாற்று உணவாக அரிசியைப் பயன்படுத்துவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சோளத்திற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்துவதால் கோழிகளுக்கு நோய் ஏற்பட்டு, முட்டை உற்பத்தி 20% முதல் 30% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி வியாபாரிகள்
விலங்கு உணவுகளில் போலி வியாபாரிகள் டொலமைட் போன்ற இரசாயனங்களைக் கலப்பதால் பெருமளவிலான கோழிகள் உயிரிழந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவனத் தட்டுப்பாடு மற்றும் தரமின்மை காரணமாக நாளாந்த முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைந்து, சந்தையில் அவற்றின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி