இலங்கையில் எகிப்து நாட்டு சிறைக்கைதி உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lanka
Prisons in Sri Lanka
By Dilakshan
இலங்கை சிறையில் இருந்த எகிப்து நாட்டவரான கைதி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 3 ம் திகதி தங்கியிருந்த விடுதியின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதுடன் விடுதிக்கு தீவைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
திடீர் சுகயீனம்
இந்த நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதன் பின்னர், திடீர் சுகயீனம் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்