வெளிநாடொன்றில் திடீரென கடலில் மூழ்கிய கப்பல் : ஆறு பேர் பலி
Accident
Egypt
World
By Raghav
எகிப்து கடற்கரையில் செங்கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை (27.03.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்
மேலும் குறித்த நீர்மூழ்கிக் கப்பல் நீரில் மூழ்கியமைக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 44 பயணிகள் குறித்த கப்பலில் இருந்துள்ளதுடன் அதில் 06 போர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 09 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பலரின் நிலை மோசமானதாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்