இராணுவ புலனாய்வு அதிகாரிகளிற்கு எதிராக மேல் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 9 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தபோது விசேட மூவரடங்கிய சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் இதற்கான உத்தரவை பிறப்பித்தனர்.
இந்த புலனாய்வு அதிகாரிகள் குழு, வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது என்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தை அடுத்தே நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
திருக்குமாரின் சாட்சியம்
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான திருக்குமார் என்பவரின் சாட்சியத்தை மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்த போதே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட 9 புலனாய்வு அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய நிரந்தர சிறப்பு மேல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.