மகிந்தவின் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல்: எக்னெலிகொட தெரிவித்ததாக மன்றில் வெளிப்படுத்திய சாட்சியம்

Mahinda Rajapaksa Sri Lanka Prageeth Eknaligoda Law and Order
By Shalini Balachandran Oct 16, 2026 06:45 PM GMT
Report

ஜனாதிபதி மஹிந்தவின் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல் நடத்தினால் ஆட்சியை மாற்றலாம் என பிரகீத் எக்னெலிகொட தெரிவித்ததாக முறைப்பாட்டுத் தரப்புச் சாட்சி சுமதிபால சுரேஷ் குமார் என்ற முரளி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் வழக்கு விசாரணை இன்று (16-10-2026) கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மூவர் கொண்ட மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

தலைமை நீதிபதி நயனா செனவிரத்ன, நளின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி!

சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி!

குறுக்கு விசாரணை

இதன்போது முறைப்பாட்டு தரப்பின் நான்காவது சாட்சியான சுமதிபால சுரேஷ் குமார் என்ற முரளி என்பவரிடம் 9 ஆவது எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அசித் சிறிவர்தன குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, "நீங்கள் தம்புள்ளை, ஹபரணை வத்தை என்ற இடத்தில் எக்னெலிகொடவை சந்தித்த போது அவர் ஏவுகணையை வீசி அப்போதைய நாட்டின் தலைவரை கொல்ல வேண்டும் என உங்களிடம் கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளீர்கள் அல்லவா?" என சட்டத்தரணி வினவினார்.

மகிந்தவின் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல்: எக்னெலிகொட தெரிவித்ததாக மன்றில் வெளிப்படுத்திய சாட்சியம் | Ekneligoda Case Missile Remark In Court

அதற்கு சாட்சி "ஆம்" என பதிலளித்ததுடன் "அப்போது நாட்டின் தலைவராக இருந்தவர் மகிந்த ராஜபக்ச தானே?" என சட்டத்தரணி மீண்டும் வினவ, சாட்சி "ஆம்" என பதிலளித்தார்.

இதன் பின்னர் இது தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா மீண்டும் விசாரணை செய்தார்.

இலங்கையின் கீர்த்தி பெற்ற காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு!

இலங்கையின் கீர்த்தி பெற்ற காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு!

புலனாய்வு பிரிவு

மேலும் வினவிய அவர் "நீங்கள் இராணுவத்திடம் சரணடைவதற்கு முன் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவுடன் சென்று ஹபரணையில் எக்னெலிகொடவை சந்தித்ததாக இன்று எதிர்த்தரப்பு குறுக்கு விசாரணையின் போது கூறினீர்கள்.

மகிந்தவின் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல்: எக்னெலிகொட தெரிவித்ததாக மன்றில் வெளிப்படுத்திய சாட்சியம் | Ekneligoda Case Missile Remark In Court

அங்கு அரச தலைவரை கொல்வது குறித்து எக்னெலிகொட கூறியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதற்கு முன் ஒரு நாள் முதல் எதிரி சார்பில் அந்த சம்பவம் குறித்து கேட்ட போது அது ஒரு உதாரணமாக கூறப்பட்டது என்று நீங்கள் கூறினீர்கள் அல்லவா, அதனை தெளிவுபடுத்த முடியுமா ?" என அவர் கேட்டார்.

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணி விடுவிப்பு!

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணி விடுவிப்பு!

ஜனாதிபதி விமானம்

அதற்கு சாட்சியான முரளி, "நானும், நாதன் ஐயாவும், எக்னெலிகொட ஐயாவும் ஹபரணை வத்தையில் பேசிக் கொண்டிருந்தோம். நானும் நாதன் ஐயாவும் யுத்தம் முடிந்துவிட்டதால் இனி சுதந்திரமாக வாழ முடியும் என்று கூறினோம்.

அப்போது எக்னெலிகொட யுத்தம் முடிந்தாலும் அனைத்து பிரச்சினைகளும் அப்படியே தான் இருக்கின்றன என்றார்.

மகிந்தவின் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல்: எக்னெலிகொட தெரிவித்ததாக மன்றில் வெளிப்படுத்திய சாட்சியம் | Ekneligoda Case Missile Remark In Court

பின்னர் நானும் நாதனும் அவற்றை முடிவுக்கு கொண்டு வரவோ, மாற்றவோ முடியாது. இந்த ஆட்சி இன்னும் 20 வருடங்களாவது இருக்கும் என்று கூறினோம்.

அப்போது எக்னெலிகொட இதை இன்று நினைத்தால் இன்றே மாற்ற முடியும் என்றார். நாங்கள் எப்படி என்று கேட்டோம்.

அவர் ஜனாதிபதி விமானத்தில் செல்கிறார். அதன் மீது ஏவுகணையை வீசினால் எல்லாம் மாறிவிடும் என்று கூறினார்." என தெரிவித்துள்ளார்.

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணி விடுவிப்பு!

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணி விடுவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016