சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி!

Trincomalee Sri Lanka Sonnalum Kuttram Srilanka Bus
By H. A. Roshan Oct 16, 2026 04:05 PM GMT
Report

கந்தளாய் – திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் பொதுமக்கள், குறித்த சந்தியில் பேருந்துக்காகக் காத்திருக்கும் போது முறையான பேருந்து தரிப்பிடமோ அல்லது வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்புப் பெறக்கூடிய நிழற்குடை வசதியோ இல்லாத காரணத்தினால் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் கர்ப்பிணி தாய்மார்கள்மற்றும் நோயாளிகள் நீண்ட நேரம் வெயிலிலும் மழையிலும் திறந்தவெளியில் நின்று பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை காணப்படுகின்றது.

பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துடன் தொடர்புடைய இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் இவ்விடத்தை நேரில் பார்வையிட்டு பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு முறையான பேருந்து தரிப்பிடத்தையும் நிழற்குடையையும் அமைத்துக் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய

ஈரானின் அணுசக்தித் திட்ட மலையை தாக்கப்போகும் அமெரிக்கா! ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரானின் அணுசக்தித் திட்ட மலையை தாக்கப்போகும் அமெரிக்கா! ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு கடூழிய சிறை

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு கடூழிய சிறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016