சிங்கள பேரினவாதத்தின் அடாவடித்தனம்! ஈழத்தமிழர்களை கண்டுகொள்ளாத இந்தியா..
வெடுக்குநாறிமலை விடயத்தில் இந்தியா பாராமுகமமாக செயற்படுவதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறிமலை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெடுக்குநாறிமலை விடயம் தொடர்பில் இந்தியா அமைதிக்காத்துள்ளமை, தமிழ் இன அழிப்பிற்கு துணைபோயுள்ளதாக கருதப்படலாம் எனவும், நிச்சயமாக இந்திய அரசின் அறிக்கை வெளியாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு
வெடுக்குநாறிமலையை கையகப்படுத்தும் நடவடிக்கையில் பௌத்த தேரர்கள் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் வடிவமே இந்துக்கள் மீதான அடாவடித்தனம் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்தியாவின் பிரதமர் மோடியினை சந்திக்க மறுத்து வருவதாகவும் சந்தித்தால் அதற்கான தீர்வுகள் கிடைக்ககூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடுகள் இலங்கையில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.