தேர்தல் ஆணைக்குழு முற்றுகையிடப்படும் - அரசாங்கத்தை எச்சரித்த நளின்
தேர்தல் ஆணைக்குழுவை முற்றுகையிட எங்களை அனுமதிக்காதீர்கள்” என சமகி ஜன பலவேகவின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று (2) நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியபோதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இப்போதே நடத்துவதற்கு தயாராக வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் இரட்டை ஆட்டம் ஆடுகின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வாள்வெட்டுக்கு மத்தியில் மாநாடு

தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரம் உள்ளது, வாள்வெட்டுக்கு மத்தியில் முன்னும் பின்னுமாக சென்று செய்தி மாநாடுகளை நடத்த முடியாது.
அதிபரின் உத்தரவுக்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என நளின் பண்டார தெரிவித்தார்.