தேர்தல்களைப் பிற்போட திட்டமிடும் அரசாங்கம் : டலஸ் தரப்பு குற்றச்சாட்டு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிக்கும் செயற்பாட்டின் அடிப்படையில் தேர்தல்களைப் பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார்.
டலஸ் அழகப்பெரும தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிறைவேற்று அதிபர் முறையை ஒழிப்பதாயின் அதற்கு முன் 13ஆம் திருத்தச் சட்டம் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பில், பரந்துபட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், துரித கதியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை நீக்குவதினை மேற்கொள்ள இடமளிக்க முடியாது என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |