தேர்தல் தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
Election Commission of Sri Lanka
Sri Lanka Politician
Government Of Sri Lanka
By Vanan
தேர்தல் தொடர்பான செலவீனங்கள் குறித்த புதிய சட்டமூலத்தை வெளியிடுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி, தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான சட்டமூலத்திற்கு நேற்று (21) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சட்டமா அதிபரின் அனுமதி
குறித்த சட்டமூலத்தில் தேர்தல் செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வர்த்தமானி வெளியிடுவதற்கும் நாடாளுமன்ற ஒப்புதலை பெறுவதற்குமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சட்ட வல்லுனர்களினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி