மன்னாரில் அதிகாலையில் நுழைந்த வாகனத்தால் பதற்றம் - குவிக்கப்பட்ட காவல்துறையினர்
காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்புடன் மன்னார் நகரைஅடைந்துள்ளது.
மன்னார் (Mannar) - மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப்பட்ட பாரிய வாகனங்கள் இன்று புதன்கிழமை (6) அதிகாலை 2.30 மணியளவில் நகரை வந்தடைந்துள்ளது.
குறித்த காற்றாலை மின் கோபுரங்களுக்கான பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மக்கள் மத்தியில் அச்சம்
அதனைத் தொடர்ந்து மறுநாள் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) காலை மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சுமார் 5 இற்கும் மேற்பட்ட காற்றாலை மின் கோரங்களுக்கான காற்றாலைகளை மன்னார் நகருக்குள் எடுத்து வர வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்னார் தள்ளாடி பகுதியில் நேற்று (5) இரவு மக்கள் கண்காணிப்பு போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
குறித்த பகுதியில் நின்ற மக்கள் அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் கலகம் அடக்கும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரங்களை ஏற்றிய வாகனம் மன்னாரை நோக்கிச் சென்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து சென்ற நிலையில் சிறிய அளவிலான மக்களே குறித்த பகுதியில் நின்ற நிலையில் காவல்துறையினர் அவ்விடத்தில் நின்றவர்களை அச்சுறுத்தி பலத்த பாதுகாப்புடன் மன்னாரை நோக்கி குறித்த வாகனம் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா
