மொட்டுவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் வெளியான தகவல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) இந்த தேர்தல் விஞ்ஞாபனமானது, சவால்களை முறியடித்து எதிர்கால சந்ததியினரின் நாளையை சகல அம்சங்களினூடாகவும் அபிவிருத்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, நாமல் ராஜபக்ஷவினால் நாட்டிற்கு முன்வைக்கப்படவுள்ள விஞ்ஞாபனத்தின் அசல் வடிவம் நேற்று (30) பிற்பகல் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) கையளிக்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டம்
மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன, நாட்டின் அபிவிருத்தி மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் அதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதுள்ள சவால்களுக்கு எதிராக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதுடன், விஞ்ஞாபனத்தில் உள்ள திட்டங்கள் நிச்சயமாக செயற்படுத்தப்படுவதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |