இருளில் மூழ்கப் போகும் சிறிலங்காவின் அரச ஊடகம்!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியின் மின்சாரத்தை மின்சார சபை துண்டிக்கும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்த மின்சார வாரியத்தின் ஒப்பந்தத்துடன் தயாரிக்கப்பட்ட கட்டணத் திட்டத்திற்கமைய, தொலைக்காட்சி சேவை தனது பணத்தை செலுத்தாததே இதற்குக் காரணமாகும்.
தற்போது தேசிய தொலைக்காட்சி மின்சார சபைக்கு 25 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துண்டிக்கும் வாய்ப்பு

தேசிய தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் டபிள்யூ.பி.கனேகலா உரிய மின்கட்டணத்தை செலுத்துவதற்கு பதிலாக மின்சார சபையிடம் அவ்வப்போது சலுகைகளை பெற்றுக்கொண்டு அங்கு தொடர்ந்து மின்சாரத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கமைய, இன்றைய தினம் ரூபவாஹினியின் மின்சாரத்தை துண்டிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்