புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் - அரசாங்கம் அளித்த அனுமதி
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
சட்ட மற்றும் முறையான வழிகளில் நாட்டிற்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நான்கு சக்கர அல்லது இரண்டு சக்கர மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
சட்ட ரீதியாக வங்கி முறை மூலம் பணம் அனுப்பும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் வெளியிட்ட பதிவு
வங்கி முறை மூலம் சட்டபூர்வமாகவும், முறையாகவும் பணம் அனுப்பும் வெளிநாட்டு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Just released d circular letting migrant workers import an electric vehicle - four wheeler or two wheeler as an incentive to promote remitance through legal and formal channels. Money transmitted from May22 is eligible and will come to an end in December 2022. #ElectricVehicles
— Manusha Nanayakkara (@nanayakkara77) August 31, 2022
மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இலங்கைக்கு பணம் அனுப்பிய தொழிலாளர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய இவ்வாறு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
