இந்தியாவின் சில பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
India
Earthquake
World
By Thulsi
இந்தியாவின் (India) இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று (20.08.2025) அதிகாலை 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அதிகாலை 4.30 மணியளவில் ரிக்டர் அளவில் 4.0 என மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.
பகுதி மக்கள் அச்சம்
புவி அதிர்வு மையம் (NCS) வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை 3:27 மணிக்கு 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
சம்பாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து NCS தனது எக்ஸ் தளத்தில், "ரிக்டர் அளவில் 3.3, இன்று அதிகாலை 03:27:09 IST மணிக்கு, அட்சரேகை: 32.87 N, தீர்க்கரேகை: 76.09 E, ஆழம்: 20 கி.மீ, இடம்: சம்பா, இமாச்சலப் பிரதேசம்" என்று பதிவிட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்