ரஷ்ய ஜனாதிபதி புடினின் கைது..! சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) கைது செய்யாமல் தவிர்க்க முடியும் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற குற்றச்சாட்டுகளில் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், ஜெனீவாவில் இருவருக்கு இடையில் சந்திப்பு நடத்த வேண்டும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் முன்மொழிவை சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் வரவேற்றதுடன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைப்பதற்கான ரோம் சாசனத்தை சுவிட்சர்லாந்து அங்கீகரித்துள்ளது.
எனவே, போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளில் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதால் அவர் சுவிட்சர்லாந்துக்கு வருகை தருவாராயின் அவரைக் கைது செய்ய வேண்டிய கட்டாயத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.
எனினும், ஐக்கிய நாடுகளின் ஐரோப்பிய மையமாக ஜெனீவா இருப்பதால் அதன் விசேட வகிபாகம் நெகிழ்வு தன்மைக்கு இடமளிக்கிறது எனவும் விளாடிமிர் புடினை கைது செய்யாமல் தவிர்க்க முடியும் எனவும் இக்னாசியோ காசிஸ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
