PAID
மின்பட்டியலை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை..! மின்சார சபை அறிவிப்பு
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Kanna
மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின்பட்டியலை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் இ-பில் சேவையைப் பதிவுசெய்யவும் நுகர்வோரை கேட்டுக்கொண்டது.
மேலும் குறித்த மின்பட்டியலை பெறும் சேவைக்காக தமது வாடிக்கையாளர்களை குறுஞ்செய்தி ஊடாகவும் பதிவு செய்வதற்கு இலங்கை மின்சார சபை ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கிறது.
அதன்படி, இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களை "EBILL" <இடைவெளி> கணக்கு இலக்கம் <இடைவெளி>மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து,1989 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பதிவுசெய்துகொள்ளுமாறு கோரியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பார்வையிட > https://ceb.lk/



புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 18 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்