மின்சார கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
மின்சார கட்டணத்தில் முன்னர் குறிப்பிட்டதை விட அதிகளவிலான தொகையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(20) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முன்மொழிவு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அதேவேளை, பல்வேறு தரப்பினரிடம் மின்கட்டணம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து தகவல் தருமாறு கோரிக்கை விடுத்ததாகவும், பல்வேறு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நாளாந்த மின்சார தேவை 4 முதல் 6 கிகாவாட் மணிநேரம் வரை அதிகரித்துள்ளதாக மின்சார சபை ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
