அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அமைச்சர் வெளியிட்ட அபாய அறிவிப்பு
தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி பொதுமக்களுக்கு அபாய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கட்டணங்களை அண்மைய நாட்களில் 20 வீதத்தால் குறைத்தோம். ஆனால், வறட்சி இப்படியே சென்றால் மின் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மின்சார சபைக்கு எவ்வித இலாபமும் இல்லை
மின்சார சபைக்கு எவ்வித இலாபமும் இல்லை, ஒவ்வொரு காலாண்டிலும் விலை மாறும்போது ஒரு மீதி வருகிறது. முந்தைய 6 மாதங்களின் மீதியை அடுத்த 6 மாதங்களுக்கு எடுத்துக்கொள்கிறோம். அதன் மூலம்தான் ஒரு முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.
அந்த முன்னறிவிப்பைச் சொல்லும்போது, மீதமுள்ள தொகையை செலவு செய்த பின்னரே எடுக்கிறோம். அதனால் ஆண்டு முடிவில் இலாபம் எதுவும் மீதியாக இருப்பதில்லை
இந்த 6 மாதங்களில் இலங்கை மின்சாரசபைக்கு 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த வறட்சி அதிகரித்தால் அது மேலும் அதிகரிக்கும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்