மின்கட்டண அதிகரிப்பு -பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் சூளுரை
மின்கட்டண அதிகரிப்பு சட்டவிரோதமானது எனவும், இலங்கை திரும்பிய பின்னர் அதற்கு எதிராக போராடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு புறம்பான முடிவுகளை எடுத்த அனைவரும் அதன் விளைவை அனுபவிக்க நேரிடும் என்று கூறிய அவர், இந்த முடிவை திரும்ப பெற முடியும் என்றார்.
தலைவர் பதவி

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை தாம் நீடிப்பதாகவும் அதிலிருந்து தன்னை நீக்குவதற்கு விசேட நடைமுறையொன்று உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அரசியலமைப்புக்கு முரணான தீர்மானம்

தாம் போராட்டத்தை கைவிடவில்லை எனவும், தற்போது உண்மையான போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், அரசியலமைப்புக்கு முரணான தீர்மானங்களை எடுத்தவர்கள் மீண்டும் பழைய முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.