மின்கட்டண திருத்த முன்மொழிவில் மேலும் தாமதம்
மின் கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையே குறித்த உத்தேச கட்டண திருத்தத்தை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணமென மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்மின்சார உற்பத்தி தொடர்பான சரியான தகவல்களை சரியான நேரத்தில் தொகுக்க முடியாமல் தாமதம் ஏற்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
பொது பயன்பாட்டு ஆணைக்குழு
இந்த நிலையில், மின்சார சபை இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதாகவும் அதற்கான முன்மொழிவை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு விரைவில் சமர்ப்பிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக முன்மொழிவை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டதை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புக்கொண்டது.
மேலும், நேற்றைய தினத்திற்கு முன்னர் (19) இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுகு முன்மொழிவை உடனடியாக வழங்குவதற்கான நினைவூட்டல் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |