காட்டுயானை தாக்கி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் படுகாயம்
                                    
                    Hambantota
                
                                                
                    Elephant
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    கிரிந்த - தலதாகம பிரதேசத்தில் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த அதிகாரி காட்டு யானையை விரட்ட முற்பட்ட போதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
மேலும் தாக்குதலுக்கு இலக்கான அதிகாரி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன் போது காட்டு யானை தாக்கியதில் அதிகாரியின் மூன்று விலா எலும்புகள் உடைந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரிந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        