யானை தாக்கியதில் உயிரிழந்த வனவிலங்கு அதிகாரி!
Accident
Polio
By pavan
கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பிரதேசத்தில் காட்டு யானையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வனவிலங்கு அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (28) இரவு குறித்த பிரதேசத்திற்கு வந்த காட்டு யானையை விரட்டும் நடவடிக்கையின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கிரியாகஸ்வெவ, மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த வனஜீவராசிகள் அதிகாரி ரித்திகல வனஜீவராசிகள் அலுவலகத்தின் தலைவராக கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி