உயிருக்கு போராடும் யானை : மீட்கும் நடவடிக்கை தீவிரம் (படங்கள்)
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka
By Dilakshan
வவுனியா - மாமடுக்குளத்தின் நீரேந்து பகுதியில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் 05 வயது யானையினை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாடு மேய்க்கச் சென்ற கிராமவாசி ஒருவர் புதையுண்ட நிலையில் யானை ஒன்று உயிருக்கு போராடுவதை அவதானித்து காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மீட்பு நடவடிக்கை
இதனையடுத்து மாமடு காவல்துறையினர் யானையினை மீட்பதற்கான நடவடிக்கையினை வனஜீவராசிகள் திணைக்களம், காவல்துறையினர், மற்றும் கிராம மக்கள் இணைந்து முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

