மகாராணியின் இறுதி நிகழ்வுகள் - ஆறு நாடுகளுக்கு அழைப்பு இல்லை
மகாராணி எலிசபெத் இன் இறுதி நிகழ்வுகள்
கடந்த 09 ஆம் திகதி காலமான இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் இன் இறுதி நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளன.
மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இறுதிச் சடங்கிற்காக, நாடுகளின் அரசியல் தலைவர்கள் முதல் தனித்துவமான அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பிரமுகர்கள் வரை பல விருந்தினர்கள் இங்கிலாந்துக்கு சென்ற வண்ணமுள்ளனர்.
ஆறு நாடுகளுக்கு அழைப்பு இல்லை
இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ விருந்தினர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், நியூயோர்க் போஸ்ட் வெளியிட்ட தகவலில் ஆறு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இதன்படி ரஷ்யா, பெலாரஸ், ஆப்கானிஸ்தான்,மியன்மார், சிரியா, மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கே அழைப்பு அனுப்பப்படவில்லை.