23 வருடங்கள் கடந்து அதே நாளில் நடந்த பெரும் அனர்த்தம்! சோகத்தில் இலங்கை
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்து 23 ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் நடந்த மற்றுமொரு மோசமான விபத்தை நினைவூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு நிகழ்ந்த விபத்தில், பேருந்து முதலில் ஒரு ஜீப்புடன் மோதி, பின்னர் பள்ளத்தில் விழுந்தது.
இதே நாளில்
இந்த நிலையில், நேற்றைய பேருந்து விபத்து, 2002 செப்டம்பரில் நிகழ்ந்த மோசமான பேருந்து விபத்தை ஒத்துப்போவதாக சமூக ஊடக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
2002 விபத்தின் போது, பேருந்து பள்ளத்தில் விழுந்து 21 பேர் உயிரிழந்திருந்துடன், அந்த விபத்தும் இதே நாளிலும், கிட்டத்தட்ட அதே நேரத்திலும் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
தொடர் பேருந்து விபத்துகள்
இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் பேருந்து விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருவது பெரும் கவலையை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.
இவ்வருடம் மே மாதத்தில், கதிர்காமத்தில் இருந்து குருணாகலை நோக்கி சென்ற பேருந்து விபத்தில் 21 பேர் பலியானார்கள்.
அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு பஸ்ஸரவில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர். இவ்விரு விபத்துகளும் சமீபத்திய எல்ல – வெல்லவாய விபத்து நிகழ்ந்த அதே மாவட்டத்தில் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
