அரசுத் துறை தொடர்பில் மஸ்க்கின் அறிவிப்பு : அதிர்ச்சியில் அமெரிக்கா
அமெரிக்க (America) அரசுத் துறையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு புதிதாக உருவாக்க வேண்டும் என ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு (Donald Trump) ஆதரவாக எக்ஸ் தளத்தில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார்.
இதனடிப்படையில், ட்ரம்ப்பும் அதிபர் தேர்தலில் கமலா ஹரிஸை (Kamala Harris) தோற்கடித்து வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியானார்.
தேவையற்ற செலவு
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) தலைவராக எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார்.
இந்த குழு அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் வேலையை செய்து வருகின்றது.
இந்தநிலையில், அரசுத் துறையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு புதிதாக உருவாக்க வேண்டும் என்ற எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலக அரசுத்துறை
இது தொடர்பில் டுபாயில் நடைபெற்ற உலக அரசுத்துறை தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரசுத் துறைகளில் ஆட்களை நீக்குவதற்கு பதில் ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டுச் சீரமைப்புகளுக்கு பின் அவற்றை புதிதாக உருவாக்கவேண்டும்.
வயல்களில் தேவையில்லாத கலைகளை வேரோடு அகற்ற வேண்டும் இல்லையென்றால் அது மீண்டும் மீண்டும் வளரக்கூடும் அதேபோன்று அரசுத் துறையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க அரசுத் துறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அவர்களை எலான் மஸ்க் வெளியேற்றி வரும் நிலையில், எலான் மஸ்கின் இந்த கருத்து அரசு ஊழியர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)