கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட உலகின் முதல் பணக்காரர் -வெடித்தது சர்ச்சை(படம்)
உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், டெஸ்லா மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇ ஓவுமான எலான் மஸ்க் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்து பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை உருவாக்கிய நிலையில் அதனை அழித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரி ஹிட்லர் உடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் செய்த ட்வீட் அழிக்கப்பட்ட பின்னர், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
கலிபோர்னியாவில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு அன்று எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸை பகிர்ந்தார். அதில் அடால்ஃப் ஹிட்லரின் புகைப்படம் உள்ளது. “என்னை ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்” என கூறும் விதமான வாசம் இடம் பெற்றிருந்தது.
இனவெறியால் பல்லாயிரக்கணக்கான் உயிர்களை கொன்று குவித்த ஹிட்லருடன் கனடா பிரதமரை ஒப்பிட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இதனையடுத்து மறுநாளான வியாக்கிழமை அன்று மதியம் தான் பதிவிட்ட ட்வீட்டை அழித்திரந்தார்.
இருப்பினும் இதுதொடர்பான கருத்துக்கள் சமுக ஊடகங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த கருத்திற்காக எலான் மஸ்க் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டுமென அமெரிக்க யூதக் குழு வலியுறுத்தி உள்ளது.

