அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய திருப்பம்... டிரம்ப் ஆதரவாளராக மாறிய எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் டுவிட்டர் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் புதிய திருப்பமாக தனது ஆதரவை டொனால்ட் டிரம்ப் பக்கம் திருப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான பதிவொன்றினையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், அதில் அவரது ஆதரவு நிலைப்பாடு டிரம்ப் பக்கம் இருப்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி தனது பதிவில், தனது முந்தைய ஜனநாயகக் கட்சி ஆதரவை ஒப்புக்கொண்ட எலான் மஸ்க், தற்போது அமெரிக்காவுக்கு ’சிவப்பு அலை’ வேண்டும் என பதிவிட்டிருக்கிறார். சிவப்பு அலை என்பது குடியரசுக் கட்சியை குறிக்கிறது.
தேர்தலுக்கு முன்
அதாவது மீண்டும் டிரம்ப் அதிபராக வரவேண்டும் என்பதை எலான் மஸ்க் வெளிப்படையாக பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார். ”தேர்தலுக்கு முன்பாக நான் ஒரு பரிசீலிக்கப்பட்ட முடிவை எடுக்க விரும்புவேன்.
ஒரு வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தால், அதற்கான காரணத்தை நான் சரியாக விளக்குவேன்" என்று முன்னதாக தெரிவித்திருந்த எலான் மஸ்குக்கு, தற்போது அதற்கான சூழல் வந்திருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
I voted 100% Dem until a few years ago.
— Elon Musk (@elonmusk) March 24, 2024
Now, I think we need a red wave or America is toast.
முன்னதாக 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு தான் வாக்களித்ததாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார், ஆனால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மின் வாகனங்கள் தொடர்பான உச்சி மாநாட்டில் எலான் மஸ்கின் டெஸ்லாவுக்கு இடம் இல்லை என தெரிய வந்ததும் மஸ்க் நிலைப்பாடில் பெரும் மாற்றம் நிகழத் தொடங்கியது.
எலான் மஸ்குக்கே விற்க முடிவு
அது மாத்திரமன்றி, டுவிட்டர் தளத்தில் வெகுவாக விமர்சிக்கப்பட்ட டிரம்ப் இதனால் வெறுப்புற்ற நிலையில் டுவிட்டருக்கு போட்டியாக ட்ரூத் சோஷியல் என புதிய சமூக ஊடகத்தை தொடங்கினார். ஆனால் டொனால்ட் ஆதரவாளர்களுக்கு அப்பால் அது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.
எனவே டுவிட்டர் தளத்திற்க்கு மீண்டும் பயனர்களை இணைக்கும் யுக்தியாகவும் இது இருக்கலாம் என பலதரப்பட்டோராலும் தற்போது பேசப்பட்டு வருகிறது, இந்நிலையில் தற்போது மீண்டும் டுவிட்டர் தளத்துக்கு திரும்பியதை அடுத்து தனது ட்ரூத் சோஷியலை எலான் மஸ்குக்கே விற்க டிரம்ப் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |