உலக செஸ் சாம்பியனான குகேஷை வாழ்த்திய எலான் மஸ்க்
உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரரான குகேஷிற்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் நிறுவங்களின் உரிமையாளரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க்(Elon Musk) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குகேஷின் எக்ஸ் தள பக்கத்தில் இட்ட பதிவொன்றிற்கு பதிளிக்கும் போதே எலான் மஸ்க், தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி கடந்த 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில், தமிழக வீரரான டி. குகேஷ் சீனாவின் டின் லிரேனை எதிர்கொண்டார்.
குகேஷின் சாதனை
14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்ததுடன் 9 சுற்றுகள் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
18th @ 18! pic.twitter.com/krXbIfewo0
— Gukesh D (@DGukesh) December 13, 2024
இந்த நிலையில், 14ஆவது சுற்றில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதால் இருவரும் வெற்றிக்காக போராடினர்.
சுமார் 3 மணி நேர போட்டிக்குப் பிறகு லிரென் போட்டியை சமநிலை செய்ய முயற்சித்தார். எனினும் 58ஆவது காய் நகர்த்தலுக்குப் பிறகு குகேஷ் வெற்றியடைந்தார். இதனால் 18 வயதான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |