சீருடையில் சென்று கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Dec 12, 2022 06:06 AM GMT
Report

காவல்துறை போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் எனக்கூறி வீடொன்றில் கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேடுதல் நடத்துவது போல் நடித்து மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நாடாளுமன்ற காவல்துறை பிரிவின் காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாலபே, பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் திஸாநாயக்க பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அவசர அழைப்பு

சீருடையில் சென்று கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்! | Emergency Call Arrest Robbery Srilanka Police

சந்தேக நபரான காவல்துறை உத்தியோகஸ்தர் கடந்த 9 ஆம் திகதி இரவு கடமை முடிந்து, சீருடையிலேயே தனது இரண்டு சகாக்களுடன் முச்சக்கர வண்டியில் மிதொட்டுமுல்ல சந்தியில் ரயில் பாதைக்கு அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்து தேடுதல் நடத்துவது போல் நடித்துள்ளனர்.

குறித்த நேரத்தில் வீட்டில் இருந்த ஒருவர் அணிந்திருந்த இரண்டு தங்க மோதிரங்கள் உட்பட சுமார் 35 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.

வீட்டுக்குள் வந்தவர்கள் தொடர்பில் வீட்டில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அவர்கள் காவல்துறை அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான119 இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு முறைப்பாடு செய்துள்ளனர்.

ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமை

சீருடையில் சென்று கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்! | Emergency Call Arrest Robbery Srilanka Police

வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த வீட்டுக்கு சென்றதால், கொள்ளையிட சென்றவர்களுக்கு தப்பிச் செல்ல முடியாமல் போயுள்ளது. காவல்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெல்லம்பிட்டி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

சீருடையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் 13 ஆண்டுகள் காவல்துறை கடமையாற்றி வந்தவர் எனவும் மூன்று ஆண்டுகள் நாடாளுமன்ற காவல்துறை பிரிவில் கடமையாற்றி வந்துள்ளார் எனவும் வெல்லம்பிட்டி காவல்நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

ஏனைய இரண்டு பேர் காவல்துறை உத்தியோகஸ்தரின் சகாக்கள் எனவும் இவர்கள் மூவரும் ஐஸ் போதைப் பொருளுக்கு மோசமாக அடிமையானவர்கள் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலதிக விசாரணை

சீருடையில் சென்று கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்! | Emergency Call Arrest Robbery Srilanka Police

வெல்லம்பிட்டிய காவல்துறையினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு பொரள்ளை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் அண்மையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் சிலாபம் பிரதேசத்தில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரும் கிருளப்பனை காவல் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.

500க்கும் மேற்பட்ட காவல்துறையினர்

சீருடையில் சென்று கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்! | Emergency Call Arrest Robbery Srilanka Police

இவர்கள் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காவல்துறை திணைக்களத்தில் கடமையாற்றும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஐஸ் மற்றும் ஏனைய போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் என தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019