நாட்டை முடக்க தயார்! - தொழிற்சங்கத்தின் அறிவிப்பு
எதிர்வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் என பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கொவிட்ட தொற்று மோசமடைந்துவரும் நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அரசாங்கம் பொதுமுடக்கம் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்றினால் மிகவும் மோசடைந்துள்ள நிலையில் பொதுமுடக்கத்தை அறிவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், அந்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துவந்துள்ள நிலையிலேயே தொழிற்சங்கங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,