மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துக்கள் தொடர்பில் ஆராயப்படும் - பந்துல குணவர்தன
Bandula Gunawardane
Sri Lanka
By Sathangani
“புதிய பேருந்துகளுக்காக செலுத்த வேண்டிய தவணைக் கடன் நிலுவையில் உள்ளதால், அனைத்து பேருந்துகளிலும் நிலையான வருமானம் பெறுவது கட்டாயமானதாகும்“ என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற 120 புதிய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையில் மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்