E-8 விசா பிரிவின் கீழ் அரசாங்க வேலைவாய்ப்பு : வெளியான அறிவிப்பு
தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் குழுவிற்கு விமான பயணச்சீட்டுக்களை வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய விசா வகை
E-8 விசா பிரிவின் கீழ் வேறு எந்த நபரோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமோ வேலை வாய்ப்புகளை வழங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், எனவே அவர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும் என்றும் அவர் வலியுருத்தியுள்ளார்.
தென் கொரியாவில் வேலைகளில் சேர்க்கப்பட்ட புதிய விசா வகை E-8 விசா வகையாகும் ஆனால் நாங்கள் அந்த விசா வகையை அனைவருக்கும் திறக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
நாங்கள் முறையான விவசாய அறிவைக் கொண்ட தகுதியான நபர்களை மட்டுமே பணியமர்த்துகிறோம் அப்படியானால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலிருந்து மட்டுமே E-8 விசா பிரிவின் கீழ் இளைஞர்கள் வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இந்தப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படும் என்றும் அதன்படி பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முறை மற்றும் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து ஊடகங்கள் மூலம் வேலை தேடுபவர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
