'அப்படித் தான் அண்ண எங்கள வச்சிருந்தவர்: ஆனால் இன்று!' முன்னாள் போராளியின் நிலை
எமது நாட்டில் ஒரு தலைமுறையை யுத்தம் விழுங்கி விட இன்று வறுமை, பொருளாதார நெருக்கடிகள், அபய இழப்புக்கள், மனதளவில் பாதிப்புகள், உறவுகளின் பிரிவுகள் என அதன் தாக்கங்கள் தலைமுறையை தாண்டியும் நீங்காத ஒன்றாக இருக்கிறது.
எத்தனையோ வலி சுமந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் எம்முடைய மக்கள்.
குடும்பத்தில் சகோதரர்களை இழந்து, ஏன் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக இழந்து தனிமரமானவர்கள் எத்தனையோ பேர்.
மண்ணுக்காக எம் மக்களின் விடிவுக்காக என எத்தனையோ தியாகங்களைச் செய்து சொல்லனா இழப்புக்களை அடைந்தவர்கள், இன்றும் அத்துயரில் இருந்து மீளாமல், பொருளாதாரத்தில் தொடர்ந்தும் கஷ்டப்பட்டபடி வாழத்தான் செய்கிறார்கள்.
போராட்டத்திற்காக எல்லாவற்றையும் வழங்கி இறுதியில் எதுவுமே கிடைக்காமல் மனதளவில் வேதனைகளோடு மட்டும் வாழும் பலர் இங்குதான் இருக்கின்றார்கள்.
இப்படி பல வடிவங்களில் பலர் நம் மண்ணையும் மக்களையும் நேசித்தவர்கள் இன்று தேடுவாரற்று வாழ்ந்து வருகின்றனர்.